அமெரிக்காவின் வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணியான ஒரு நாய் செய்த குறும்பு செயலால் வீடு பற்றி எரிந்த சம்பவம் குறித்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாகவே பெரும்பாலானவர்களுக்கு வீட்டில் செல்ல பிராணிகளை வளர்ப்பது என்பது மிகவும் பிடிக்கும். அவை செய்யும் குறும்புத்தனம் மனதிற்கு மகிழ்ச்சியை அளிக்கும். ஆனால் வீட்டில் செல்லப் பிராணிகளை தனியாக விட்டு செல்லும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

வீட்டார் கவனக்குறைவாக இருந்ததால் வளர்ப்பு நாய் ஒன்று செய்த குறும்பு செயல் விபரீதத்தில் முடிந்துள்ளது. அமெரிக்காவில் ஓக்லஹோமா நகரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. வீட்டின் வரவேற்பு அறையில் செல்லப்பிராணிகளான இரண்டு நாய்களும் ஒரு பூனையும் படுத்து ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தபோது அதில் ஒரு நாய் பவர் பேங்க் ஐ கழித்து விளையாடிக் கொண்டிருந்த சமயத்தில் திடீரென அதில் தீப்பொறிகள் உருவாகி பெரிய சேதத்தை ஏற்படுத்தியுள்ளன. இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.