பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த அர்ஷத் நதீம், ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றதால் அவருக்கு பல கோடி ரூபாய் பரிசுத் தொகை கிடைத்துள்ளது. ஆனால், அவர் பெற்ற பரிசுத் தொகையில் இருந்து கணிசமான தொகையை வரியாக செலுத்த வேண்டியிருக்கும்.

பாகிஸ்தான் அரசின் நிதித்துறை விதிப்படி, பரிசுத் தொகைக்கு வரி விதிக்கப்படும். வரி செலுத்துபவராக இருந்தால் 15 சதவீதமும், வரி செலுத்தாதவராக இருந்தால் 30 சதவீதமும் வரி விதிக்கப்படும்.அர்ஷத் நதீம் மொத்தம் 20 கோடி ரூபாய் பரிசுத் தொகை பெறுகிறார். இதில் 3 முதல் 6 கோடி ரூபாய் வரை வரியாக செலுத்த வேண்டியிருக்கும்.

அர்ஷத் நதீம் தங்கம் வென்றதால் பாகிஸ்தான் அரசு மற்றும் பிற தனியார் நிறுவனங்கள் பல கோடி ரூபாய் பரிசுத் தொகையை அறிவித்துள்ளன. மேலும், அவருக்கு வீடு, நிலம் உள்ளிட்ட பரிசுகளும் வழங்கப்பட்டுள்ளன.

பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்று திரும்பிய அர்ஷத் நதீமுக்கு  பாகிஸ்தானில் உள்ள பாரிஸ் தூதரகத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் அவருக்கு அந்நாட்டின் 2-வது உயரிய விருதான ஹிலால் இ இம்தியாஸ் விருது வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.