உலக அளவில் மக்கள் அதிகம் பயன்படுத்தும் ஓடிடி தளமாக நெட்பிளிக்ஸ் இருக்கிறது.  இதில் மற்ற ஓடிடி  தளங்களை விட சிறப்பு அம்சங்கள் அதிகமாக இருக்கிறது. இந்நிலையில் இந்த நிறுவனம் பொருளாதாரம் மந்த நிலை காரணமாக செலவுகளை குறைத்து வருவாய் பெருக்குவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. அதனால் முன்னதாக கடவுச்சொல் பகிர்வை கட்டுப்படுத்த முடிவு செய்தது.

இந்த முயற்சி வெற்றி பெற்றதால் netflix 6 மில்லியன் புதிய சந்தாதாரர்களை பெற்றது. இதனால் netflix சந்தா கட்டணத்தை  உயர்த்த முடிவு செய்தது. இந்த கட்டண உயர்வானது அமெரிக்கா மற்றும் கனடாவில் அமலுக்கு வர இருக்கிறது.  மேலும் கட்டணம் உயர்வால் ஏற்படும் மாற்றங்களை ஆய்வு செய்து மற்ற இடங்களிலும் இந்த கட்டண உயர்வு அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.