அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோவில் பணத்தில் கோவில்களை கட்டாமல் அறநிலையத்துறை கல்லூரிகளை கட்டுவதாக குற்றம் சாட்டிய நிலையில் இதற்கு தற்போது அமைச்சர் சேகர்பாபு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆட்சிக்காலத்திலும் கோவில் நிதியில் கல்லூரிகள் கட்டப்பட்டுள்ளது. இதுவும் அறநிலையத்துறை சார்பில் செய்யப்பட்ட சதிசெயலா.? அதிமுக தலைவர்களை எடப்பாடி பழனிசாமியை ஏற்கவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. பாஜக என்ற மலைப் பாம்பு அதிமுகவை கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கி வருகிறது.

அதிமுக கட்சியின் சார்பில் அம்மன் அர்ஜுனன் மருதமலை கோவில் சார்பாக கல்லூரி கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். அதிமுக எம்எல்ஏக்கள் பெரிய புள்ளான், அமுல் கந்தசாமி, ராஜன் செல்லப்பா ஆகியோரும் கோவில் நிதி சார்பில் கல்லூரிகள் கட்ட வேண்டும் என சட்டசபையில் கோரிக்கை வைத்தனர். வரலாறு தெரியாமல் சங்கிகள் வைக்கும் கோரிக்கையை எடப்பாடி பழனிசாமி முன்வைப்பது ஏற்கத்தக்கது அல்ல.

அறநிலையத்துறை சார்பில் கட்டப்பட்ட கோவில்களில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்கள் படிக்கும் நிலையில் கோவில்களில் 19 மருத்துவமனைகளையும் கட்டியுள்ளோம். காமராஜர் ஆட்சி காலத்தில் கூட அறநிலையத்துறை சார்பில் கல்லூரிகள் திறக்கப்பட்டது. அதிமுக ஆட்சியிலும் அறநிலையத்துறை சார்பில் கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில் சங்கிகளை மகிழ்ச்சி படுத்துவதற்காகவே எடப்பாடி பழனிசாமி இவ்வாறு பேசுகிறார். மேலும் அதிமுக ஆட்சிக்காலத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு பழனி ஆண்டவர் கல்லூரியை திறந்து வைத்ததை எடப்பாடி பழனிசாமி தான் என்று கூறினார். அதோடு எதுவும் தெரியாமல் தேவையில்லாமல் அவர் விஷத்தை பரப்புகிறார் என்றும் கடுமையாக விமர்சித்தார்.