சின்னத்திரையில் மிகவும் பிரபலமான சீரியல் நடிகைகளில் ஒருவர்தான் நடிகை காயத்ரி யுவராஜ். தன்னுடைய எதார்த்தமான நடிப்பாலும் குழந்தைத்தனமான பேச்சாளும் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டவர். இவர் விஜய் டிவி மற்றும் ஜீ தமிழில் பல சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இதனைத் தொடர்ந்து இவர்தனக்கு நடனம் சொல்லிக் கொடுத்த யுவராஜ் என்பவரை காதலித்து கடந்த 2011 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதிகளுக்கு தற்போது ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் நடிகை காயத்ரி எப்போதும் இணையத்தில் ஆக்டிவாக இருப்பது வழக்கம். அதன்படி சமீபத்தில் தான் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கும் செய்தியை அவர் வெளியிட்டிருந்த நிலையில் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து கர்ப்பமாக இருக்கும் காயத்ரி ட்ரெண்டிங் பாடலுக்கு குதித்து குதித்து நடனமாடி வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவை பார்த்த இணையவாசிகள் கர்ப்பமாக இருக்கும் போது இப்படி எல்லாம் நடனம் ஆடக்கூடாது என அட்வைஸ் கூறி வருகிறார்கள்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Gayathri Yuvraaj இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@gayathri_yuvraaj)