பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையான கரீனா கபூர், இரண்டு குழந்தைகளுக்குத் தாயான பிறகும் தனது உடல்நலத்தைப் பேணுவதில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார். தற்போது 45 வயதாகும் அவர், அதிகாலையில் உடற்பயிற்சி, முறையான உணவுக்கட்டுப்பாடு மற்றும் சரியான நேரத்திற்கு உறக்கம் போன்ற பழக்கவழக்கங்களால் இன்னும் இளமை மாறாமல் காட்சியளிக்கிறார்.
மாலை 6:30 மணிக்கே இரவு உணவை முடித்துவிட்டு, 9 மணிக்கு உறங்கச் செல்லும் இவரது வாழ்க்கைமுறை பல பெண்களுக்குப் பெரிய உத்வேகமாக அமைந்துள்ளது.சமீபத்தில் ஐதராபாத்தில் நடைபெற்ற ஒரு நகைக்கடை தொடக்க விழாவில் கரீனா கபூர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
அப்போது அவர் அணிந்திருந்த பாரம்பரிய சல்வார் மற்றும் தங்க நகைகள் அனைவரையும் கவரும் வகையில் அமைந்திருந்தது. 45 வயதிலும் இளம் கதாநாயகிகளுக்குப் போட்டியாக அதே பொலிவுடன் காட்சியளித்த கரீனாவின் புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.
