சென்னை சவுகார்பேட்டை பகுதியில் வருத ராஜலு (63) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த மாதம் 22ஆம் தேதி மாம்பழம் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்திருந்தார். அந்தப் புகாரில், என்னுடைய சகோதரி அமிர்தவல்லி (83) தி நகரில் உள்ள ஒரு வீட்டில் தனியாக வசித்து வருகிறார். நான் வளர்மதி மற்றும் சத்யா ஆகிய இரு பெண்களை என் சகோதரியை கவனித்துக் கொள்ள நியமித்திருந்தேன். அவர்கள் கடந்த சில வருடங்களாக என் சகோதரி வீட்டில் தங்கியிருந்து அவரை கவனித்து வருகிறார்கள்.

நான் கடந்த 22ஆம் தேதி என் சகோதரி வீட்டிற்கு சென்றிருந்தேன். அப்போது வீட்டின் பீரோவில் 8 மாதங்களுக்கு முன்பு வைக்கப்பட்டிருந்த 30 சவரன் தங்க நகைகள் மாயமாகியிருந்தது. எனக்கு வளர்மதி மற்றும் சத்யா ஆகிய இருவர் மீதும் சந்தேகம் இருக்கிறது என்று புகாரில் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அவர்கள் நடத்திய விசாரணையில் சத்யா (50) பல்வேறு நேரங்களில் கொஞ்சம் கொஞ்சமாக நகைகள் மொத்தத்தையும் திருடியது தெரிய வந்தது. மேலும் தற்போது சத்யாவை காவல்துறையினர் கைது செய்த தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.