வடக்கிலும் I.N.D.I.A கூட்டணி வெற்றிபெறும் என ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் பாசிச போக்கை தமிழ்நாடு, கேரள மக்கள் இணைந்து முறியடிப்பார்கள். இரண்டு மாநிலங்களிலும் பாஜக படுதோல்வி அடையும் என்ற அவர், இந்த வெற்றி இந்தியா முழுவதும் பிரதிபலிக்கும் என்றார். மேலும் பேசிய அவர்,கூட்டணிக்கு யார் தலைவர், யார் பிரதமர் போன்ற கேள்விகள் தற்போதைக்கு அவசியமில்லாதது என்றும் தெரிவித்தார்.