நடிகர் வடிவேலு நடித்த திரைப்படம் ஒன்றில் எந்த வேலையும் பார்க்காமல் சும்மா உட்கார்ந்து இருக்கும் காமெடி காட்சி இடம் பெற்றிருக்கும். அதனைப் போலவே தென்கொரியாவில் அரசு சார்பாக சும்மா இருக்கும் போட்டி ஒன்று நடத்தப்பட்டு வெற்றியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் அந்த நாட்டின் ஒலிம்பிக் வீரர் மற்றும் பிரபல யூட்யூபில் உள்ளிட்ட 117 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

சரியாக 90 நிமிடங்கள் செல்போன் பார்க்காமலும் யாரிடம் பேசாமலும் கண்களை விளித்தவாறு சும்மாவே உட்கார வேண்டும். இதில் அவர்களுடைய இதயத்துடிப்பும் தொடர்ந்து கண்காணிக்கப்படும். பிறகு போட்டியாளர்களின் 10 பேர் தேர்வு செய்யப்பட்டு மிகவும் நிலையான இதயத்துடிப்புடன் உள்ளவர்கள் வெற்றியாளராக அறிவிக்கப்படுகின்றனர். வேகமான நகர வாழ்க்கை முறையில் இருந்து விடுபட இந்த போட்டி நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.