நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகின்றன. ரிசர்வ் வங்கியில் வழிகாட்டுதல்களின் படி வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களிடம் சேவைகளை மேற்கொள்ளலாம். இந்த நிலையில் ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தலின்படி பஞ்சாப் நேஷனல் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது மார்ச் 19ஆம் தேதி இன்றுக்குள் பஞ்சாப் நேஷனல் வங்கி வாடிக்கையாளர்கள் தங்களுடைய கணக்கில் கேஒய்சி விவரங்களை அப்டேட் செய்ய வேண்டும்.

இல்லையென்றால் வங்கி கணக்கு சேவைகள் பாதிக்கப்படலாம் அல்லது வங்கி கணக்கு முடக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த பணிக்கு இன்று ஒரு நாள் மட்டுமே இறுதி நாள் அவகாசம் இருப்பதால் கேஒய்சி சரிபார்ப்பை முடிக்காத வாடிக்கையாளர்கள் தங்களுடைய வங்கிக்கு நேரடியாக சென்று தேவையான ஆவணங்களை அப்டேட் செய்யலாம். கணக்கு முடக்கப்படும் பட்சத்தில் இதனை மீண்டும் ஆக்டிவேட் செய்வதற்கு சிரமமான வழிமுறைகள் இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.