இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது பிக்சட் டெபாசிட் திட்டத்தில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஏழு முதல் 29 நாட்கள் திட்டத்திற்கு நான்கு சதவீதம் வட்டியும், 30 முதல் 90 நாட்கள் உள்ள திட்டத்திற்கு 4.25 சதவீதம் வட்டியும், 91 முதல் 129 நாட்கள் கொண்ட திட்டத்திற்கு 4.5 சதவீதம் வட்டியும், 180 முதல் 269 நாட்கள் கொண்ட திட்டத்திற்கு 4.95 சதவீதம் வட்டியும் வழங்கப்படுகின்றது. அதேசமயம் 60 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய மூத்த குடிமக்களுக்கு 0.50 சதவீதம் கூடுதல் வட்டி வழங்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.