ரிசர்வ் வங்கியானது, இந்தியாவில் பணவீக்கம் தொடர்ந்து உச்சத்தில் இருப்பதால் வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்புள்ளது. ஆர்பிஐ ஜூன் மாதத்தில் இருந்து 3 முறை 50 அடிப்படை புள்ளிகள் உயர்த்திய நிலையில்,  மத்திய ரிசர்வ் வங்கியின் பணக் கொள்கை குழு ஏப்ரல் 6ஆம் தேதி(இன்று) கூடி ஆலோசிக்கிறது.

நாட்டின் பணவீக்கம் இன்னும் கட்டுக்குள் வராததால் ஏப்ரல் 6ஆம் தேதி(இன்று) ரெபோ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி மேலும் 25 புள்ளிகள் உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கடன் வாங்கியவர்களின் வட்டி 0.25% உயரும். தற்போது 6.5 சதவீதமாக இருக்கும் ரெபோ வட்டி 6.75 சதவீதமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.