இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் குடிமக்களுக்கு வழங்கப்பட்ட 12 இலக்க தனிப்பட்ட அடையாள எண் ஆதார்கார்டு. ஆதார் கார்டை இந்தியாவில் வசிக்கும் குடிமகன்கள் எங்கும் அடையாளம் மற்றும் முகவரிக்கான சான்றாக பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் இது நாடு முழுவதும் வசிப்பவர்களுக்கான ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் அடையாள சரிபார்ப்புக்குரிய ஒரே ஆதாரமாக செயல்படுகிறது. உங்களது வங்கிக்கணக்கு ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்க, பின்வரும் எளிய வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளமான https://uidai.gov.in/ என்ற பக்கத்திற்கு செல்லவும். என் ஆதார் என்ற டேப்பை கிளிக் செய்து, கீழே தோன்றும் மெனுவில் இருந்து ஆதார் சேவைகள் என்பதை தேர்ந்தெடுக்கவும். “ஆதார் சேவைகள்” எனும் பிரிவின் கீழ் ஆதார் மற்றும் வங்கிக் கணக்கு இணைக்கும் நிலையை சரிபார்க்கவும் என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். தற்போது நீங்கள் ஒரு புது பக்கத்திற்கு அழைத்து செல்லப்படுவீர்கள். அந்த புது பக்கத்தில் உங்களது 12 இலக்க ஆதார் எண்ணையும் திரையில் காட்டப்படும் பாதுகாப்புக் குறியீட்டையும் உள்ளிடவும். சென்ட் ஓடிபி என்பதைக் கிளிக் செய்து உங்களது பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்பட்ட ஓடிபி எண்ணை உள்ளிடவும். ஓடிபி-ஐ உள்ளிட்டதும் லாக் இன் என்பதைக் கிளிக் செய்து உங்களது ஆதார் மற்றும் வங்கிக்கணக்கு இணைப்பின் நிலையை பார்க்க முடியும்.