SBI வங்கி வாடிக்கையாளராக நீங்கள் இருப்பின் வங்கியில் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து மிஸ்டுகால் கொடுத்து வங்கி பேலன்ஸ், மினி ஸ்டேட்மென்ட் பெற்றுக்கொள்ளலாம். இச்சேவை SBI Quick Missed Call Banking Service என்று அழைக்கப்படுகிறது. இந்த அம்சத்தின் கீழ் SBI வங்கியின் சேவை எண்ணுக்கு வாடிக்கையாளர்கள் மிஸ்டுகால் (அ) SMS அனுப்புவதன் வாயிலாக வங்கி சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும். ஆன்லைன் அப்ளிகேஷன், இருப்புத்தொகை விவரம், மினி ஸ்டேட்மெண்ட், ATM கார்டு பிளாக்கிங், கார் லோன் அம்சங்கள் மற்றும் PM சமூகபாதுகாப்பு திட்டம் உட்பட பல்வேறு வசதிகளை SBI வழங்குகிறது. இதுபோன்ற சேவைகளுக்கு வாடிக்கையாளர்கள் செய்ய வேண்டியது ஒரேஒரு மிஸ்டு கால் மட்டும் கொடுத்தால் போதும்.

 SBI குயிக் மிஸ்டு கால் வங்கிச்சேவை பயன்படுத்துவது எப்படி..?

SBI குயிக் மிஸ்டுகால் வங்கி சேவையை பயன்படுத்த உங்களை நீங்கள் பதிவுசெய்ய வேண்டும். வங்கியில் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து 09223488888 என்ற எண்ணுக்கு “REG account number” என டைப் செய்து எஸ்எம்எஸ் அனுப்பவேண்டும். இதையடுத்து இச்சேவை ஆக்டிவேட் ஆகும். இருப்புத் தொகையை சரிபார்க்க விரும்பினால், மேலே கொடுக்கபட்டிருக்கும் எண்ணுக்கு மிஸ்டுகால் கொடுங்கள் (அ) 09223766666 என்ற எண்ணிற்கு “BAL” என SMS அனுப்ப வேண்டும்.