நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கிகளான கனரா வங்கி, பேங்க் ஆப் பரோடா மற்றும் யுகோ ஆகிய மூன்று வங்கிகள் நிதி அடிப்படை கடன்களுக்கான வட்டியை உயர்த்தி உள்ளதாக அறிவித்துள்ளன. ஆகஸ்ட் 12ம் தேதி முதல் கடனுக்கான வட்டியில் ஐந்து அடிப்படை புள்ளிகளை அதிகரிக்க கனரா வங்கி முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
அதனைப் போலவே bank of baroda வங்கியும் ஆகஸ்ட் 12ஆம் தேதி முதல் வட்டியை உயர்த்துவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் யுகோ வங்கி இன்று முதல் வட்டியை உயர்த்தியுள்ளதாக அறிவித்துள்ள நிலையில் இதன் காரணமாக வாகனம் மற்றும் தனி நபர் கடனுக்கான வட்டி விகிதம் உயரக்கூடும். இந்தச் செய்தி லோன் வாங்கியவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
