தற்போது அனைத்து வேலைகளுமே தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டதாக மாறி வருகிறது. வேலைக்கு பயன்படுத்துவது மட்டுமல்லாமல் கற்றல் நடவடிக்கைகளுக்கும் கூட தற்போது இணையத்தை மையமாகக் கொண்டுள்ளது. இந்த நிலையில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே லேப்டாப், கணினிகளை பார்க்கிறார்கள்.

இந்த நிலையில் லேப்டாப்பை அதிக நேரம் மடியில் வைத்து வேலை செய்தால் ஆபத்தான உடல் நிலை பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் என்று ஆய்வுகள் கூறுகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கிறது. வேலை செய்வதால் விந்தணுக்களின் வளர்ச்சி குறையும். இது கருவுறுதலை குறைக்கிறது. மடியில் வைத்து கொண்டு வேலை செய்தால் தோல் புற்றுநோய் ஏற்படும் அபாயமும் இருக்கிறது. இதனால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.