பொதுவாக தமிழர்கள் பலரும் சமையலறையில் பாரம்பரிய இரும்பால் செய்யப்பட்ட உபகரணங்களை பயன்படுத்துகின்றனர். இரும்பு சமையல் பாத்திரங்கள் நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. நாம் பயன்படுத்தக் கூடிய தோசைகள் போன்ற தட்டையான இரும்பு பாத்திரங்களில் எண்ணெய் சேர்த்து தோசை மற்றும் உணவுகளை சமைப்பதால் பாத்திரத்தின் மேற்பரப்பில் எண்ணெய் மற்றும் அழுக்கு ஆகியவை அப்படியே ஒட்டிக் கொள்ளும். இதனால் உணவின் தரமும் பாதிக்கப்படும். எனவே இரும்பு தோசை கல்லை எப்படி சுத்தம் செய்வது என்பது குறித்து இதில் பார்க்கலாம்.

இரும்பு பாத்திரங்களை தண்ணீரில் அதிக நேரம் ஊற வைத்தால் எளிதில் துருப்பிடித்து விடும். அவ்வாறு இல்லாமல் அதை இப்படியும் சுத்தம் செய்திடலாம். இரும்பு பாத்திரங்களை எப்போதும் சுத்தம் செய்யும்போது மென்மையான ஸ்பாஞ்ச் அல்லது ஸ்கிரப்பரை பயன்படுத்த வேண்டும். இல்லையென்றால் தோசை கல்லில் மேற்பரப்பில் கீறி விட்டு மேல் அடுக்கை அகற்றி விடும். சுத்தம் செய்த பிறகு உலர்ந்த இடத்தில் வைக்க வேண்டும். அதன் மேல் கனமான பொருட்களை வைப்பதை தவிர்க்க வேண்டும். இதில் கொதிக்கும் நீரை ஊற்றி சிறிது நேரத்துக்கு பிறகு கழுவலாம். அதனால் அதில் குவிந்துள்ள உணவுத் துகள்கள் அனைத்தும் எளிதில் தளர்ந்து விடும்.

கிண்ணத்தில் தண்ணீர் மற்றும் வினிகரை சேர்த்து கரைசலாக தயார் செய்து ஒரு ஸ்பான்ச் எடுத்து இந்த கரைசலில் நனைத்து தோசை கல்லில் தடவி மெதுவாக ஸ்க்ரப்பிங் செய்து சில நிமிடங்களுக்கு அப்படியே விட்டு தண்ணீர் கொண்டு சுத்தம் செய்யவும். எலுமிச்சையை பாதியாக வெட்டி அதில் உப்பை தொட்டு தேய்த்து சில நிமிடங்களுக்கு அப்படியே விட்டுவிட்டு அதன் பிறகு ஸ்க்ரப்பர் மூலம் பாத்திரத்தை நன்கு தேய்க்கவும். அடுத்து மீண்டும் வெதுவெதுப்பான நீரில் கழுவி துணியால் துடைக்க வேண்டும். தோசை கல்லில் உள்ள அகற்ற முடியாத கறைகளை அகற்றுவதற்கு வெதுவெதுப்பான நீரில் பேக்கிங் சோடாவை சேர்த்து அதில் தடவி சில நிமிடங்களுக்கு அந்த பேஸ்ட்டை ஊறவைத்து அதன் பிறகு மென்மையான ஸ்பான்ச் கொண்டு ஸ்கரப்பிங் செய்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால் உங்களது தோசைக்கல் புதுசு போல பளபளக்கும்.