விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் தற்போது மீண்டும் கூட்டணி சேர்ந்திருக்கும் படம் தான் லியோ. இதன் முதற்கட்ட சூட்டிங் சென்னையில் ஜனவரியில் நடந்த நிலையில் தற்போது அடுத்த கட்ட ஷூட்டிங்க்காக படக்குழு காஷ்மீரில் இருக்கிறது. விஜய், திரிஷா உள்ளிட்ட மொத்த படக் குழுவும் தற்போது காஷ்மீரில் தான் இருக்கிறது.

இந்நிலையில் லியோ திரைப்படத்திற்காக த்ரிஷா வாங்கும் சம்பளம் பற்றிய விவரம் வெளியாகி உள்ளது. திரிஷா மூன்று கோடி ரூபாய் தான் சம்பளமாக பெறுகிறார். எனினும் இதற்கு முன் அதிகம் சம்பளம் பெற்று வந்த த்ரிஷா தற்போது திடீரென குறைத்தது ஏன் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.