தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நானி. இவரது முந்தைய திரைப்படமான ஷியாம் சிங்கா ராய் மற்றும் அடடே சுந்தரா அமோக வரவேற்பை பெற்றது. இதையடுத்து நானி “தசரா” எனும் புது படத்தில் நடித்து வந்தார். இதன் முதல் பார்வை போஸ்டரில் நடிகை சில்க் ஸ்மிதாவின் போட்டோ இருந்தது. அப்போதில் இருந்தே இப்படத்திற்கான ஒவ்வொரு அறிவிப்புகளும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதில் நானி உடன் கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்திருக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தை ஸ்ரீ காந்த் ஒடிலா இயக்கியுள்ளார். இந்நிலையில் இப்படத்தின் தீக்காரி பாடலின் மேக்கிங் வீடியோ வெளியாகி உள்ளது. இப்பாடல் ஏற்கனவே கடந்த பிப்,.15 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.  இந்த திரைப்படம் உலகம் முழுவதும் மார்ச் 30ம் தேதி வெளியாகும் என படக்குழு தெரிவித்து உள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பான் இந்திய படமாக உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.