மும்பையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் (lift) பலூன்கள் வெடித்து சிதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக ஒரு நபர் அதிகப்படியான கேஸ் பலூன்களை மின்தூக்கிக்குள் கொண்டு சென்றபோது, அவை திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்தன. அந்த நேரத்தில் மின்தூக்கிக்குள் இருந்த ஒரு இளம் பெண்ணும் வாலிபரும் தீக்காயமடைந்தனர்.
<a href="http://

“>
அதிர்ஷ்டவசமாக மின்தூக்கி கதவு மூடுவதற்கு முன்பே இந்த விபத்து நடந்ததால், உள்ளே இருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு உடனடியாக வெளியே ஓடி வந்தனர். மின்தூக்கி கதவு மூடியிருந்தால் உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்கக்கூடும் என்று அங்கிருந்தவர்கள் அச்சத்துடன் தெரிவித்தனர்.

இந்த பதைபதைக்க வைக்கும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் விரும்பி விளையாடும் இந்த கேஸ் பலூன்கள் எவ்வளவு ஆபத்தானவை என்பதை இந்த சம்பவம் உணர்த்துகிறது.

இது தொடர்பாக கோரேகாவ் காவல்துறையினர் பலூன் விற்பனையாளர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கேஸ் பலூன்களைக் கையாளும்போதும், இது போன்ற மூடிய இடங்களுக்குள் கொண்டு செல்லும்போதும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.