தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் பல சுவாரசியமான மற்றும் அதிர்ச்சிகரமான தகவல்களைத் தந்து வரும் நிலையில், திருச்சி மாவட்டம் லால்குடி தொகுதியில் போட்டியிட்ட நடிகர் மன்சூர் அலிகானுக்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
சுயேச்சை வேட்பாளராகக் களம் இறங்கிய அவர், இத்தேர்தலில் நோட்டாவுடன் (NOTA) போட்டியிடும் நிலைக்குத் தள்ளப்பட்டு இறுதியில் தோல்வியைத் தழுவியுள்ளார்.
வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி, நோட்டா 390 வாக்குகளைப் பெற்றுள்ள நிலையில், மன்சூர் அலிகான் வெறும் 101 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார்.
