கிரிக்கெட் ரசிகர்களால் அவ்வப்போது சமூக வலைதளங்களில் பகிரப்படும் இந்த ‘கிளாசிக்’ சம்பவம், 2015-ம் ஆண்டு இந்திய அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது நிகழ்ந்தது.
அந்தப் போட்டியின் 5-வது ஓவரில், இந்தியத் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா ரன் எடுக்க முயன்ற போது, வங்காளதேச வேகப்பந்து வீச்சாளர் முஷ்தாபிசுர் ரஹ்மான் வேண்டுமென்றே அவரது குறுக்கே வந்து தடுத்தார். இதனால் ஆத்திரமடைந்த ரோகித், அவரை எச்சரித்துவிட்டுச் சென்றார். பின்னர் 25-வது ஓவரில், கேப்டன் எம்.எஸ். தோனி ரன் எடுக்க ஓடிய போதும் அதே பாணியில் முஷ்தாபிசுர் குறுக்கே வர முயன்றார்.
ஆனால், இம்முறை ‘கூல்’ கேப்டன் தோனி சற்றும் தயங்காமல், தனது தோள்பட்டையால் அவரை ஓங்கி முட்டித் தள்ளிவிட்டு ரன்னை நிறைவு செய்தார். இந்த மோதலில் நிலைகுலைந்து கீழே விழுந்த முஷ்தாபிசுர், சிகிச்சைக்குப் பின்பே மீண்டும் பந்துவீச வந்தார்.
Throwback to when MSD took revenge of Rohit Sharma. 🥶
> It was clear that Mustafizur deliberately came between the runs to get Rohit run out.
> He tried the same against MSD, but this time got a solid reply.
That smile from MSD at the end! ☠️🥵pic.twitter.com/FieMhmxKgr
— AK 45 (@ImRo45_Club) March 26, 2026
“>
ரோகித் சர்மாவுக்கு நேர்ந்ததற்கு தோனி பாணியில் கொடுத்த இந்த ‘பதிலடி’ மற்றும் இறுதியில் தோனி அளித்த அந்தச் சின்னப் புன்னகை இன்றும் ரசிகர்களால் “தல-யின் மாஸ் பழிவாங்கல்” (Revenge) எனக் கொண்டாடப்படுகிறது.
