மத்தியப்பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் தன்னை மனைவி உடல் மற்றும் மனதளவில் துன்புறுத்துவதாக கூறிய லோகேஷ் என்ற நபர், மறைமுக கேமரா மூலம் பதிவு செய்த வீடியோவொன்று சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மார்ச் 20ஆம் தேதி ஏற்பட்ட இந்த சம்பவத்தில், லோகேஷை அவரது மனைவி தாக்குகிறார்.

வீடியோவில், லோகேஷ் கைகளை கூப்பிட்டு மன்னிப்பு கேட்கும் நிலையில், அவரது மனைவி பல முறை அறைந்து, முகத்தில் காலால் உதைக்கும் காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதை நிறுத்த முயன்ற மற்றொரு பெண்ணையும் அவர் தவிர்த்தார்.

லோகேஷ் கூறுகையில், 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஹர்ஷிதாவை இந்து மரபு படி திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணத்துக்குப் பிறகு, அவரது மனைவியும், மாமியாரும், மைத்துனரும் சேர்ந்து தங்கம், வெள்ளி நகைகள் மற்றும் பணம் வேண்டும் என்று கேட்டுள்ளனர். அவர் மறுத்ததும், உடல் மற்றும் மன ரீதியாக துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

“>

 

இவர் இந்த உண்மையை வெளிக்கொணர, தனது வீட்டில் மறைமுக கேமரா பொருத்தி இந்த வீடியோ ஆதாரங்களைச் சேகரித்துள்ளார். தற்போது, சட்னா கொட்வாலி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ள லோகேஷ், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பாதுகாப்பு கோரி மனு அளித்துள்ளார்.

இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவ, நெட்டிசன்கள் பல்வேறு வகையில் கருத்து தெரிவித்துள்ளனர். பலர், “ஒரு பாலினத்திற்கு மட்டும் சட்டங்கள் இருந்தால் அவை தவறாக பயன்படுத்தப்படுவது இயல்பே” என கூறி, பாலின சார்பற்ற சட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.