நாடு முழுவதும் ரேஷன் அட்டை வாயிலாகவே பொதுமக்கள் அரிசி, பருப்பு, கோதுமை உள்ளிட்ட அனைத்து வகையான ரேஷன் பொருட்களையும் வாங்கி பயன் பெற்று வருகின்றனர். அதோடு  மத்திய அரசின் “ஒரே நாடு ஒரே ரேஷன்” என்ற திட்டத்தின் வாயிலாகவும் லட்சக்கணக்கான பொதுமக்கள் ரேஷன் பொருட்களை பெற்று வருகின்றனர். இதனிடையே ரேஷன் கடைகளிலிருந்து ரேஷன் பொருட்களை கள்ளச் சந்தையில் விற்பனை செய்வது உள்ளிட்ட பல்வேறு குளறுபடிகள் நடந்தபடி இருந்தது. இதனால் கட்டாயமாக ரேஷன் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

அதோடு ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு வருகிற ஜூன் 30ம் தேதி வரைக்கும் கால அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. நாளை ஒரு நாள் மட்டுமே அவகாசம் இருப்பதால் உடனடியாக ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்கும்படி வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த 2 ஆவணங்களையும் இணைக்காத ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்படாது என்றும் ரேஷன் கார்டு ரத்துசெய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆகவே கட்டாயம் ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது.