தமிழகத்தில் சென்ற 2020, 2021, 2022-ம் வருடங்களில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமெடுத்து பரவியது. இத்தகைய நிலையில் அரசு ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளை அறிவித்து தடுப்பு பணியை மேற்கொண்டு உள்ளது. இந்த காலக்கட்டத்திலும் போக்குவரத்து கழக ஊழியர்கள் 24 மணிநேரமும் பணியாற்றி வந்தனர். தங்கள் உயிரை சற்றும் பொருட்படுத்தாமல் பணியாற்றிய ஊழியர்களின் சேவையை பாராட்டி அவர்களை கௌரவிக்கும் விதமாக சிறப்பு ஊக்கத்தொகை வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த உத்தரவின் படி தற்போது போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக ரூ.17.15 கோடியை வழங்குவதற்கு அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. அதன்பின் 14-வது ஊதியக்குழு ஒப்பந்தத்தின் படி ரூ.171.05 கோடி நிலுவைத் தொகையையும் ஊழியர்களுக்கு வழங்க அரசு உத்தரவிட்டு உள்ளது. அரசின் இந்த அறிவிப்பால் ஊழியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.