வடமாநிலங்களில் தகுதி இல்லாத பல்லாயிரக்கணக்கானோர் போலி ரேஷன் கார்டுகளை பயன்படுத்தி இலவச பொருட்களை வாங்கி வருவது கண்டறியப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அனைவரும் கைரேகைகளை மீண்டும் பதிவு செய்ய வேண்டும் என்று நிர்பந்திக்கப்படுகிறது. அதன் பேரில் உத்தரபிரதேச மாநிலம் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் தகுதி இல்லாத ஒரு லட்சம் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் இனி மோசடிகள் தடுக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.