தமிழகத்தின் சில மாதங்களாகவே திமுகவின் முக்கிய அமைச்சர்கள் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். இதுகுறித்து பேசியுள்ள முதல்வர் ஸ்டாலின், ரெய்டு என்ற சலசலப்புக்கு மிரட்டலுக்கும் திமுக பயப்படாது என்று தெரிவித்துள்ளார்.

பயிற்சி பாசறை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் உரையை வாசித்த உதயநிதி, 75 ஆண்டுகளாக பல அச்சுறுத்தல்களை எதிர்த்து தான் திமுக வெற்றி பெற்றதாகவும், தற்போது அமைச்சர் எவ. வேலு வீட்டில் சோதனை நடந்து வருவதாகவும் கூறிய அவர், ED, IT க்கு பிஜேபி ஆளும் மாநிலங்கள் கண்ணுக்கு தெரிவதில்லை, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் மற்றும் தெரிவதாக சாடினார்.