திருச்சி விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டியில் கூறியதாவது, சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் திமுக பைல்ஸ் மூன்றாம் பாகம் வெளியிடப்படும். திமுக மட்டும் இல்லாமல் அதன் கூட்டணி கட்சிகள் எடுத்த டெண்டர்கள் அதனால் அவர்கள் அடைந்த லாபங்கள் குறித்து அம்பலப்படுத்துவோம்.

மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்தை கலைஞர் கைவினை திட்டம் என பெயரிட்டு தமிழக அரசு அமல்படுத்துகிறது. கடைசியில் அவர்கள் மத்திய அரசிடம் நிதி கேட்டு வருவார்கள். அப்படி கிடைக்கவில்லை என்றால் வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என வசனம் பேசுவார்கள். டங்ஸ்டன் சுரங்க விவகாரம் குறித்து மத்திய அமைச்சரை வருகிற 12-ஆம் தேதி பார்க்க உள்ளோம். அவரை சந்தித்த பிறகு நல்ல முடிவோடு வருவோம் என கூறியுள்ளார்.