இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினந்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. மோசடிக்காரர்கள் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி தொடர்ந்து மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி 300 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட நபரை சேலத்தில் போலீசார் கைது செய்துள்ளனர்.

பெங்களூருவை தலைமை இடமாகக் கொண்டு பிடிஎம் குரூப் ஆஃப் கம்பெனி என்ற பெயரில் தீபக் திலக் என்பவர் நிறுவனம் நடத்தி திருப்பூர், நாமக்கல், ஈரோடு மற்றும் சேலம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பொதுமக்களிடம் முதலீடு பெற்று தொடர்ந்து மோசடியில் ஈடுபட்டுள்ளார். முதலீடு செய்தவர்களுக்கு முதலில் சில மாதங்கள் மட்டும் பணத்தை திருப்பித் தந்த நிலையில் பிறகு மோசடியை அரங்கேற்றியுள்ளார்.