ஒரு வெளிநாட்டு சுற்றுலா பயணிக்கு இந்தியாவில் நடந்த அனுபவம் தற்போது சமூக வலைதளத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. சமீப காலமாக இந்தியாவை வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் புகழ்ந்து வரும் வீடியோக்கள் வைரல் ஆகிறது. அந்த வகையில் கொல்கத்தாவில் நடந்த ஒரு சம்பவத்தின் வீடியோ தற்போது வைரல் ஆகிறது. அதாவது ஒரு தள்ளு வண்டி  கடைக்காரரிடம் வாழைப்பழ ஷேக் வாங்கி ஒரு சுற்றுலா பயணி குடிக்கிறார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Native Ty (@nativety)

அந்த வெளிநாட்டு சுற்றுலா பயணி அதனை குடிக்கும் போது மிகவும் அற்புதமாக இருக்கிறது என்கிறார். பின்னர் அந்த வெளிநாட்டு சுற்றுலா பயணி பணம் எவ்வளவு என்று கேட்டதற்கு 20 ரூபாய் என்று அந்த விற்பனையாளர் கூறுகிறார். இருப்பினும் வெளிநாட்டு சுற்றுலா பயணி 30 ரூபாய் கொடுத்தார். ஆனால் தள்ளுவண்டி கடைக்காரர் அந்த பத்து ரூபாயை டிப்ஸாக ஏற்க மறுத்ததோடு அதனை அவர் திரும்ப கொடுத்துவிட்டார். மேலும் அவரது நேர்மையை கண்டு வெளிநாடு சுற்றுலா பயணி அசந்து இந்த வீடியோவை பதிவிட தற்போது சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகிறது.