உலக கால்பந்து வீரர்களில் தன் நிலையை நிலைநாட்டிய லியோனெல் மெஸ்சி, அர்ஜென்டினா அணியின் கேப்டனாக இருந்தபோது உலக கோப்பை வென்றுள்ளார். இவரது GOAT Tour of India 2025 என்ற சுற்றுப்பயணம் இந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற உள்ளது, மற்றும் அந்தப் பயணத்தின் போது டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் மெஸ்சி, பிரதமர் நரேந்திர மோடியின் 75-வது பிறந்தநாளை (செப்டம்பர் 17) முன்னிட்டு, 2022 FIFA உலகக் கோப்பை ஜெர்சியை கையொப்பமிட்டு அனுப்பியுள்ளார். மேலும் உலகக்கோப்பை போட்டியின் போது தான் அணிந்திருந்த ஜெர்சியை பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் பரிசாக மெஸ்ஸி அன்பளிப்பாக அனுப்பியுள்ளார். மேலும் பிரதமர் மோடி நாளை தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
