இந்தியாவில் ஆன்லைன் ஷாப்பிங் எனப்படும் இணையதள வணிகத்தில் அமேசான் நிறுவனம் முன்னணியில் உள்ளது. இந்த நிறுவனம் விஜயதசமி மற்றும் தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் என்ற பெயரில் பல சலுகைகளுடன் பொருட்களை விற்பனை செய்கின்றது.  அதன்படி அமேசான் தளத்தில் கோடாக் 40 இன்ச் மாடல் ஸ்மார்ட் டிவிக்கு 46 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

அதாவது 26 ஆயிரத்து 999 ரூபாய் என்ற விலைக்கு அறிமுகமான இந்த டிவியை தற்போது 46 சதவீதம் தள்ளுபடியில் வெறும் 14 ஆயிரத்து 499 ரூபாய்க்கு வாங்கிக் கொள்ளலாம். இதனைத் தொடர்ந்து மொத்தமாக 12 ஆயிரம் ரூபாய் என பாதிக்கு பாதி விலை குறைக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி அமேசான் தளத்தில் இந்த டிவி வாங்கினால் கூடுதல் தள்ளுபடி மற்றும் கேஷ்பேக் சலுகைகள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.