இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்ற வருகிறது. அதன்படி கூகுள் பே, போன் பே போன்ற யுபிஐ அப்ளிகேஷன்கள் மூலம் புதிய வகை மோசடி நடைபெற தொடங்கியுள்ளது. அதாவது google pay மூலமாக நமக்கு தெரியாத நபர் படம் அனுப்பியது போல போலி மெசேஜை அனுப்புவார். அதனைப் போலவே வங்கியில் பணம் வந்தது மாதிரியும் ஒரு போலி மெசேஜை போனுக்கு அனுப்பி விடுவார்கள்.

அதன் பிறகு போன் செய்து தெரியாமல் பணம் அனுப்பி விட்டேன் பணத்தை திருப்பிக் கொடுங்கள் என்று கேட்பார்கள். இதனை நம்பி நீங்கள் திருப்பி படம் அனுப்பினால் உங்களுடைய மொத்த பணமும் காலி. எனவே பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.