நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பெருமாள் சன்னதி பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான இடம் அகரகடம்பனூர் பகுதியில் உள்ளது. இந்த இடத்தை அவருடைய மனைவியின் பெயருக்கு பட்டா மாறுதல் செய்ய விரும்பியுள்ளார். இதற்காக அவர் அந்த பகுதியைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் செல்வியை அணுகியுள்ளார். அப்போது அவர் தனக்கு ரூ.10,000 லஞ்சம் வேண்டும் என்று கேட்டுள்ளார்.

இதை கணேசன் கொடுக்க விரும்பாததால் நாகப்பட்டினம் லஞ்ச ஒழிப்பு துறை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கணேசனிடம் கொடுத்து அனுப்பி வைத்தனர். இந்த நேற்று பணத்தை கணேசன் செல்வியிடம் கொடுத்தார். அப்போது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்து செல்வியை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.