தமிழக அரசானது கடந்த செப்டம்பர் மாதம் தமிழகத்தில் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு ரூபாய் ஆயிரம் உரிமை தொகை வழங்கும் திட்டத்தை அமல்படுத்தியது.இதன் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு முதல் கட்டமாக ஒரு கோடியே 6,52,000 பெண்கள் இதில் பயன் அடைந்தார்கள். அதன் பிறகு விண்ணப்பத்தில் உள்ள பிழைகள் நீக்கப்பட்டு மேல்முறையீடு செய்தவர்களையும் சேர்த்து இறுதியாக  ஒரு கோடியே 15 லட்சம் பெண்கள் பணத்தை பெற்று வருகிறார்கள்.

ஆனால் திட்டத்தில் விண்ணப்பித்து பலனடையாத பலரும் மேல்முறையீடு செய்வது குறித்து அரசன் அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இந்நிலையில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை விரிவுப்படுத்தும் பணிகள் விரைவில் தொடங்கவிருப்பதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது தமிழ்நாட்டில் தகுதிவாய்ந்த 1.7 கோடி பெண்களை இத்திட்டம் சென்றடைகிறது. தேர்தல் நேரத்தில் இதுகுறித்து பேசிய அமைச்சர் உதயநிதி, தேர்தல் முடிந்த பின்னர், இத்திட்டம் அனைத்து பெண்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று உறுதியளித்தார். அதற்கான பணிகள் தொடங்கியுள்ளன.