சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு, காப்பீடு தொகை வழங்குவதற்காக, காப்பீடு நிறுவனங்கள், விபத்து தொடர்பான ஆவணங்களை, காவல் துறை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்கின்றன. இதற்கு காவல்துறை சார்பில், 100 ரூபாய் கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில், ஒரு ஆவணத்துக்கான பதிவிறக்க கட்டணம் ரூ.100-ல் இருந்து ரூ. 125ஆக உயர்த்தி அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.