
பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் டெல்லியில் உள்ள அசோக் நகரில் குடிசைவாழ் மக்களுக்காக கட்டப்பட்ட 1675 அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்து வைத்தார். அப்போது தனக்காக இதுவரை ஒரு வீடு கூட தான் கட்டவில்லை என்றும் ஏழை மக்கள் அனைவருக்கும் வீடு கட்டி கொடுப்பதுதான் தன்னுடைய கனவு என்றும் கூறினார். இதனை தற்போது அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சித்துள்ளார். டெல்லியில் சட்டமன்ற தேர்தல் விரைவில் வர இருக்கும் நிலையில் பாஜக மற்றும் ஆம் ஆத்மி இடையே வார்த்தை மோதல் என்பது அதிகரித்துள்ளது. அந்த வகையில் அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்த பிறகு பிரதமர் மோடி கடந்த 10 வருடங்களில் டெல்லி ஒரு பேரழிவால் சூழப்பட்டுள்ளது. அன்னா ஹசாரேவை நிறுத்தினர். இதன் மூலம் நேர்மையற்ற சிலர் டெல்லியை பேரழிவை நோக்கி தள்ளும் நிலையில் மக்கள் இனியும் அதற்கு அனுமதி கொடுக்க மாட்டார்கள் என்றார்.
இதற்கு தற்போது அரவிந்த் கெஜ்ரிவால் பதிலடி கொடுத்துள்ளார். இது பற்றி அவர் கூறும்போது, பிரதமர் நரேந்திர மோடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளையும் டெல்லி மக்களையும் அவதூறாக பேசியுள்ளார். டெல்லியில் உள்ள குடிசைகளை இடித்ததன் மூலம் 2 லட்சம் மக்கள் வீடு இழந்துள்ளனர். பாஜக தான் ஏழைகளுக்கு எதிரி. டெல்லி மக்களுக்கு ஆம் ஆத்மி நல்லது தான் செய்து வருகிறது. அதன்பிறகு பிரதமர் மோடி 2700 கோடி மதிப்பிலான வீட்டை கட்டியுள்ளார் எனவும் 8,400 கோடி மதிப்பிலான தனி விமானத்தில் பயணம் செய்கிறார் என்றும் கூறினார். அதோடு 10 லட்ச ரூபாய் மதிப்பிலான சூட் அணிவதாகவும் கூறினார். மேலும் கடந்த 2016 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடிக்காக குஜராத்தை சேர்ந்த ஒருவர் பிரத்தியேகமாக தயாரித்த சூட் 4.3 கோடி ரூபாய்க்கு ஏலம் போனதோடு அதுக்கு என்ன சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றது.