இன்றைய காலகட்டத்தில் இணையதள பயன்பாடு என்பது அதிகரித்துவிட்ட நிலையில் உலகின் எந்த ஒரு மூலையிலும் நடக்கும் சம்பவங்கள் வீடியோக்களாக வெளி வருகிறது. இந்த காலத்தில் மக்களிடையே பாசம், அன்பு மற்றும் இரக்ககுணம் போன்றவைகள் குறைந்த அளவில் இருக்கிறது என்பதை உணர்த்தும் விதமாக பல சம்பவங்கள் நடந்துள்ள நிலையில் அது தொடர்பான வீடியோக்களும் வெளிவந்துள்ளது. சமீபத்தில் கூட பிகார் மாநிலத்தில் ஒரு லாரி விபத்தில் ஓட்டுநர் உயிருக்கு போராடும் நிலையில் மக்கள் அதனை பொருட்படுத்தாமல் லாரியிலிருந்து கீழே கொட்டிய பாலை பிடித்து சென்ற வீடியோ வெளியானது. தற்போது மரணத்தை விடவும் ஒரு கொடுர இரக்கமற்ற வீடியோ வெளியாகி உள்ளது.
அதாவது கர்நாடகா மாநிலத்தில் திடீரென லாரி ஓட்டுநர் ஒருவர் விபத்தில் சிக்கினார். அந்த லாரியின் முன்பக்க கண்ணாடிகள் உடைந்து அவர் ரத்த கோரத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார். அப்போது அங்கு வந்த மக்கள் அவருக்கு உதவி செய்யாமல் அவரிடம் இருந்த செல்போன் மற்றும் பணம் போன்றவற்றை பறித்து செல்கிறார்கள். அவர் உதவி என கேட்டு நிலையிலும் அவர்கள் உதவி செய்யாமல் பணம் மற்றும் செல்போன் போன்றவற்றை திருடியதால் ஒரு கட்டத்தில் அவர் அமைதியாகிவிட்டார். மேலும் கடைசியில் அந்த லாரி ஓட்டுனர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ வைரலாகி மனிதநேயத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.
Humanity Died on the Road
An injured truck driver cried for help, but instead of helping, people looted his phone and wallet.
When greed replaces compassion, humanity dies.#Accident #RoadAccident #TruckDriver #Humanity pic.twitter.com/k5aLwKGTAp
— Sneha Mordani (@snehamordani) January 3, 2025
