பிரபல தெலுங்குத் திரைப்பட நடிகர் அல்லு அர்ஜுன், தனது 15-வது திருமண நாளை முன்னிட்டு, தனது மனைவி சினேகா ரெட்டிக்கு ரூ. 1.5கோடி மதிப்புள்ள மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes-Benz) காரைப் பரிசளித்து இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்.
நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் சினேகா ரெட்டி ஆகியோருக்கு கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் 6-ம் தேதி திருமணம் நடைபெற்றது. தங்களது 15-வது திருமண நாளை முன்னிட்டு, தனது மனைவிக்குத் தனது அன்பை வெளிப்படுத்தும் விதமாகப் பிரம்மாண்டமான கார் ஒன்றை அல்லு அர்ஜுன் பரிசாகத் தேர்ந்தெடுத்திருந்தார்.
View this post on Instagram
இந்தச் சிறப்பான தருணத்தில், அல்லு அர்ஜுனின் தந்தை அல்லு அரவிந்த் மற்றும் அவர்களது மகன் அல்லு அயன் ஆகியோர் உடனிருந்தனர். அனைவரின் முன்னிலையிலும் சினேகா ரெட்டியிடம் காரின் சாவியை அல்லு அர்ஜுன் ஒப்படைத்தார். கணவர் அளித்த இந்த எதிர்பாராத விலையுயர்ந்த பரிசால் சினேகா ரெட்டி மிகுந்த மகிழ்ச்சியடைந்தார்.
இந்த நெகிழ்ச்சியான நிகழ்வின் புகைப்படங்கள் மற்றும் காணொலிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. அல்லு அர்ஜுனின் ரசிகர்கள் இந்த நட்சத்திர தம்பதிக்குத் தங்களது திருமண நாள் வாழ்த்துகளைப் பொழிந்து வருகின்றனர்.
தொழில் ரீதியாகப் பிஸியாக இருந்தாலும், குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதில் அல்லு அர்ஜுன் எப்போதும் முதலிடத்தில் இருக்கிறார் என்பதற்கு இந்தத் திருமண நாள் கொண்டாட்டம் ஒரு சான்றாக அமைந்துள்ளது .மேலும் நடிகர் அல்லு அர்ஜுன் புஷ்பா படத்தில் நடித்த தன்மூலம் இந்திய அளவில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகராக உருவெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
