தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், நடிகருமான விஜய் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். அவரது குடும்ப வாழ்க்கை தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சூழலில், பொதுவெளியில் அவர் மேற்கொண்ட சில நடவடிக்கைகள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. சமீபத்தில் பிரபல தயாரிப்பாளர் கல்பாத்தி சுரேஷ் குடும்பத்துத் திருமண நிகழ்வில் நடிகர் விஜய், நடிகை த்ரிஷாவுடன் இணைந்து கலந்துகொண்டார். இருவரும் ஒரே நிறத்தில் ஆடை அணிந்து, ஒரே காரில் வந்து மணமக்களை வாழ்த்திய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.
விஜய்யின் மனைவி சங்கீதா அவரிடமிருந்து விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளதாகக் கூறப்படும் நிலையில், இந்தச் சம்பவம் ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. “அரசியலில் தடம் பதிக்கும் இந்த முக்கியமான நேரத்தில், இத்தகைய சர்ச்சையான செயல்கள் தேவையா?” என அவரது ஆதரவாளர்களே கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்கிடையில், விஜய்யின் மனைவி சங்கீதா நீதிமன்றத்தில் மற்றுமொரு மனுவைத் தாக்கல் செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில், “சென்னை நீலாங்கரையில் உள்ள தனது வீட்டிற்குள் நுழைய விஜய் அனுமதி மறுக்கிறார்” என்று அவர் குற்றம் சாட்டியிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தத் தகவல் அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய்யின் இந்த நடவடிக்கைகள் குறித்து நடிகரும் இயக்குனருமான சமுத்திரகனி கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். ஒரு திரைப்படப் பூஜை நிகழ்வில் இயக்குனர்கள் பாலா மற்றும் ஆர்.வி. உதயகுமார் ஆகியோருடன் உரையாடியபோது அவர் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.
அதில், “இது என்ன விளையாட்டா? இவ்வளவு பிரச்சனைகள் போய்க்கொண்டிருக்கும்போது, அவர்களை வெளியே அழைத்துச் செல்கிறீர்களே.. நான்கு சுவற்றுக்குள் வைத்துக்கொள்ள வேண்டியதுதானே? யாரை நீங்கள் பழிவாங்குகிறீர்கள்?” என சமுத்திரகனி ஆவேசமாகப் பேசியுள்ளார்.
மேலும், “கட்சிக்காரர்களே இனி நம்மால் முடியாது என்று சொல்லும் நிலைக்குக் கொண்டு வந்துவிட்டீர்களே” என்று அவர் வருத்தத்துடன் கூறியுள்ளார். விஜய் அரசியலுக்கு வந்தபோது அவரை வரவேற்றவர்களில் சமுத்திரகனியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகர் விஜய் பொதுவெளியில் இவ்வாறு நடந்து கொள்வது அவரது அரசியல் வாழ்க்கையை பாதிக்கும் என்ற கோணத்தில் சமுத்திரகனி இவ்வாறு பேசியுள்ளதாக கூறப்படும் நிலையில் அது குறித்து வீடியோ வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,
View this post on Instagram
