இந்தியாவில் அனைத்து மக்களும் தங்களின் பரிவர்த்தனைகளுக்கான பில்களை பெற்றுக் கொள்வதை உறுதி செய்யும் விதமாகவும் ஊக்குவிக்கும் வகையிலும் மத்திய நிதி அமைச்சகம் புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. மேரா பில் மேரா அதிகாரி என்ற புதிய திட்டத்தின் மூலம் ஒவ்வொரு காலண்டிலும் ரூபாய் ஒரு கோடி காண இரண்டு பம்பர் பரிசுகள் வழங்கப்படும். இந்த திட்டம் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் அடுத்த 12 மாதங்களுக்கு சோதனை அடிப்படையில் தொடங்கப்பட உள்ள நிலையில் சரக்கு மற்றும் சேவை வரிகளுக்கான விலை பட்டியல்களில் தேர்வு செய்யப்படும் ஒவ்வொரு பில்களும் 10 ஆயிரம் ரூபாய் பரிசு தொகை வீதம் பத்து ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் குலுக்கல் நடத்தப்படும் மாதத்தின் ஐந்தாம் தேதி வரை பதிவேற்றம் செய்யப்பட்ட பில்கள் குழுக்களில் தேர்வு செய்யப்படும். இந்த திட்டம் நாட்டில் உள்ள அசாம், குஜராத், ஹரியானா மற்றும் பாண்டிச்சேரி போன்ற யூனியன் பிரதேசங்களில் தொடங்கப்பட்டுள்ள நிலையில் இந்தத் திட்டத்தில் இன்வாய்ஸ் களுக்கான குறைந்தபட்ச மதிப்பு 200 ரூபாய் ஆகும். ஒரு மாதத்தில் 25 இன்வாய்ஸ் பில்கள் வரை ஒருவர் பதிவேற்றிக் கொள்ள முடியும் எனவும் இதற்காக என்ற இணையதளம் போர்ட்டலில் பில்களை பதிவேற்றிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.