விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன், குடும்பத்தினர் 2009ம் ஆண்டு போரில் கொல்லப்பட்டதாக இலங்கை அரசு கூறி வருகிறது. இதை பிரபாகரன் ஆதரவாளர்கள் நம்ப மறுத்து வருகிறார்கள். அவ்வப்போது பிரபாகரன் உயிரோடு இருப்பதாக பல தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது.

இந்நிலையில் டென்மார்க்கில் வசிக்கும் பிரபாகரனின் அண்ணன் மனோகரன் உள்ளிட்டோர் பிரபாகரன், குடும்பத்தினர் ஏற்கெனவே வீரச்சாவு அடைந்து விட்டதாகக் கூறி, கடந்த 18ஆம் தேதி வீரவணக்க நாள் நடத்தி,மரண சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.