இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை மேற்கொள்கின்றனர். மற்ற போக்குவரத்துகளுடன் ஒப்பிடும்போது குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணிக்க முடியும் என்பதால் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். அப்படி ரயிலில் பயணிக்கும் போது பயணிகள் ரயில்வே விதிகளை தெரிந்து வைத்திருப்பது அவசியம்.

பயணிகள் தாங்கள் புறப்படும் ஊரிலிருந்து பல இடங்களுக்கு சுற்றுலா சென்று மீண்டும் அதே ஊருக்கு திரும்ப சர்க்குலர் ஜர்னி என்ற டிக்கெட்டை ரயில்வே வழங்கி வருகின்றது. இந்த டிக்கெட்டை மதுரை, திருச்சி, கோவை மற்றும் சேலம் மண்டல தலைமை நிலையங்களில் மட்டுமே பெற முடியும். பயணம் புறப்படும் தேதி, ரயிலின் எண், செல்லும் இடம், மாறும் ரயில்கள் உள்ளிட்ட தகவல்களை குறிப்பிட்டு சர்க்குலர் டிக்கெட் பெற வேண்டும்.