ராஜஸ்தான் மாநிலம் பார்மர் என்ற மாவட்டத்தில் நடந்த கொடூர சம்பவம் ஒன்று தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பத்ரேஷ் என்ற கிராமத்தை சேர்ந்த முகேஷ் என்பவரின் சகோதரி ஜெதானி. இவரை குடும்பத்தினர் மனிதாபிமானமற்ற முறையில் குடும்பத்தினர் நடத்தி வந்துள்ளனர். இதனால் விரக்தி அடைந்த அவர் முகேஷின் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட குழந்தை உயிர் பிழைத்தது. கடந்த காலங்களில் ஜெதானி இதுபோன்று நடந்துள்ளார். இதனால் முகேஷுக்கு முன்பு பிறந்த இரண்டு குழந்தைகளும் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளன. இவர் குழந்தைகளுக்கு விஷம் கொடுக்கும் வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.