கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலிருந்து எர்ணாகுளத்திற்கு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 34 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் தன் மனைவியுடன் பயணம் செய்தார். அப்போது கணவன் மனைவிக்கு இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. இதனால் அந்த வாலிபர் பேருந்தை நிறுத்துமாறு ஓட்டுநர் மற்றும் நடத்துனருடன் தகராறு செய்தார்.

ஆனால் அவர்கள் பேருந்தை பணிமனையில் தான் நிறுத்துவோம் என்று கூறிவிட்டனர். இந்நிலையில் திடீரென அந்த வாலிபர் ஜன்னல் வழியாக கீழே குதித்து விட்டார். இதைப் பார்த்து அவருடைய மனைவி மற்றும் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக ஓட்டுநர் பேருந்தை நிறுத்தினார். அவர்கள் சென்று பார்த்த போது கீழே விழுந்த வாலிபருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது. உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.