இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் அரசு ஊழியர்களுக்கு புதிய ஊதிய குழுவின் அடிப்படையில் புதிய சம்பள கமிஷன் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய சம்பள கமிஷனுக்கான பலன் வரும் ஆண்டு முதல் அமலுக்கு வர உள்ளதாகவும் கிட்டத்தட்ட 12 ஆயிரம் ரூபாய் வரை சம்பள உயர்வு கிடைக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் ஆல் அங்கீகரிக்கப்பட்ட உதவி பெறும் முதன்மை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் இல்லாத ஊழியர்களுக்கு உரிய குழுவின் அடிப்படையில் இந்த புதிய சம்பள உயர்வு அமல்படுத்தப்பட உள்ளது.

அதேசமயம் நகராட்சி ஆணையரின் ஒப்புதலுடன் ஆசிரியர் அல்லாத மற்றும் முதன்மை ஆசிரியர்களின் சம்பளத்தில் பத்து முதல் 12 ஆயிரம் ரூபாய் வரை உயர் வு அரசு தெரிவித்துள்ளது. சம்பள உயர்வுடன் மாநில அரசு ஊழியர்களுக்கான நிலுவைத் தொகையும் வழங்கப்பட உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. இருந்தாலும் மாநில அரசின் நிலுவைத் தொகையை செலுத்திய பிறகு தான் ஊழியர்களுக்கான நிலுவை தொகை அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என அரசு தெரிவித்துள்ளது.