இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு மோசடி சம்பவங்களும் தினந்தோறும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அரசு தொடர்ந்து மக்களுக்கு பல அறிவுறுத்தல்களை வழங்கி வந்தாலும் தினந்தோறும் மோசடிக்காரர்கள் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் மும்பையை சேர்ந்த ஒரு பெண் செட் டாப் பாக்ஸை ரீசார்ஜ் செய்தபோது 81 ஆயிரத்தை இழந்துள்ளார். செட்டாப் பாக்ஸ்க்கு 931 ரூபாய் ரீசார்ஜ் செய்தும் சேனல்கள் எதுவும் வரவில்லை.

இதனால் அவர் கூகுளில் உள்ள வாடிக்கையாளர் சேவை எண்ணுக்கு தொடர்பு கொண்டு உள்ளார். அதில் பேசியவர்,அந்தப் பெண்ணின் மொபைலில் ரிமோட் அக்சஸ் அப்ளிகேஷனை டவுன்லோட் செய்ய வைத்து அவரது கணக்கிலிருந்து 81 ஆயிரம் ரூபாயை திருடியுள்ளார். இது தொடர்பாக அந்த பெண் போலீசில் புகார் அளித்துள்ள நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.