நாட்டில் பல மாநிலங்களிலும் குழந்தை திருமண சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டுதான் வருகின்றன. அதிலும் குறிப்பாக கொரோனா காலத்தில் சொல்லவே வேண்டாம். மாணவிகள் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்தபோது பெரும்பாலும் குழந்தை திருமணங்கள் அரங்கேறியது. இது தொடர்பான ஆய்வு முடிவுகளும் குழந்தை திருமணங்கள் குறித்து கூறுகின்றன. இந்நிலையில் குழந்தை திருமணங்களுக்கு எதிராக அசாம் அரசு கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது.

குழந்தை திருமணங்களை தடுக்க 200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை 3000 முதல் 4000 பேர் வரை கைது செய்யப்படுவதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார். மேலும் 2026 ஆம் ஆண்டுக்குள் குழந்தை திருமணங்கள் முற்றிலும் ஒழிக்கப்பட்ட பாதிக்கப்பட்டவர்களுக்கும் மறுவாழ்வு அளிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.