ரூ. 50 ஆயிரத்திற்கு அதிகமாக பணம் எடுப்பதற்கு ஒரேயொரு வங்கிக்கு ரிசர்வ் வங்கியானது  தடை விதித்துள்ளது. அதாவது பெங்களூருவை மையமாக கொண்டு தேசிய கூட்டுறவு வங்கி (National Co-operative Bank) ஒன்று  செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் பணப் பரிமாற்றம் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்குத்தான் புதிய சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

இந்த வங்கியில் இருந்து அடுத்த ஆறு மாதங்களுக்கு ரூ.50 ஆயிரத்திற்கு அதிகமாக வாடிக்கையாளர்களால் ஒரே நேரத்தில் பணம் எடுக்க முடியாது. மேலும் இந்த வங்கிக்கு புதிய லோன்களை வழங்குதல், ஏற்கனவே உள்ளவற்றை புதுப்பித்தல் போன்ற அதிகாரங்களும் பறிக்கப்பட்டுள்ளன.