ஆந்திரா மாநிலம் கோதாவரி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சண்டைக்கோழி போட்டி நடைபெறுவது வழக்கம். இந்த போட்டியில் அரசியல் பிரபலங்கள் திரை நட்சத்திரங்கள் என பலர் பங்கெடுப்பர். சமீபத்தில் இப்பகுதியில் சண்டக்கோழி ஒன்று நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்று 27 லட்சம் ரூபாய் பரிசு தொகையை பெற்றது.

இது தொடர்பான காணொளி வெளியாகி வைரலான நிலையில் தாய்லாந்தில் இருந்து நான்கு பேர்  கோதாவரிக்கு வந்ததோடு வெற்றி பெற்ற சண்டைக்கோழியை விலை கொடுத்து வாங்க கேட்டுள்ளனர். ஆனால் கோழியின் உரிமையாளர் அந்த கோழியை விற்பனை செய்ய முடியாது எனக் கூறியதால் வேறு ஒரு சண்டைக்கோழியை மூன்று லட்ச ரூபாய் கொடுத்து வாங்கி சென்றுள்ளனர். இது போன்ற சண்டைக்கோழிகள் பிரத்தியேகமாக முந்திரி, பாதாம், முட்டை, வைட்டமின் மாத்திரை போன்றவை கொடுக்கப்பட்டு வளர்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.